உள்ளூர் செய்திகள்

 முதியவர் தற்கொலை

அரியாங்குப்பம்: நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த முதியவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தவளக்குப்பம் ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் மணி, 66; நீரிழிவு நோயால் அவதிப்பட்ட இவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நோய் குணமாகாத விரக்தியில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ