உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கதண்டு கடித்து முதியவர் சாவு

கதண்டு கடித்து முதியவர் சாவு

காரைக்கால்: அம்பகரத்துார் பகுதியில் கதண்டு கடித்து முதியவர் இறந்தார். காரைக்கால், அம்பகரத்துார், தாமனங்குடியைச் சேர்ந்தவர் கலியப்பன், 65; கூலி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் வீட்டின் பின்புறம் சென்றபோது அங்கு கூடு கட்டியிருந்த கத்தண்டுகள் அவரை கடித்தன. மயக்கமடைந்த கலியப்பனை அம்பகரத்துார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். முதலுதவி அளிக்கப்பட்ட பின், மேல்சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின்பேரில், திருநள்ளாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை