உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆற்றில் மூழ்கி மூதாட்டி பலி

ஆற்றில் மூழ்கி மூதாட்டி பலி

புதுச்சேரி: இயற்கை உபாதைக்கு சென்ற மூதாட்டி சங்கராபரணி ஆற்றில் மூழ்கி இறந்தார். பாகூர் அடுத்த உள்ளேரிப்பட்டு பள்ளத் தெருவைச் சேர்ந்தவர் அஞ்சானு பவுனு, 66. இவரது மகள் முத்துக்குமாரியை, திருக்காஞ்சியில் திருமணம் செய்து கொடுத்தார். இதையடுத்து மகளை பார்க்க அடிக்கடி திருக்காஞ்சிக்கு அஞ்சானு பவுனு செல்வது வழக்கம். அதன்படி மகள் வீட்டிற்கு சென்ற அஞ்சானு பவுனு அங்கே தங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு இயற்கை உபாதைக்கு செல்வதாக மகளிடம் கூறிவிட்டு சங்காரபரணி ஆற்றிக்கு சென்றார். பின், அவர் வீட்டிற்கு வரவில்லை. இந்நிலையில் நேற்று காலை சங்காரபரணி ஆற்றில் ஒருவர் இறந்து கிடப்பதாக மங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அங்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். விசாரணையில் இறந்தது அஞ்சானு பவுனு என்பது தெரியவந்தது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !