தேர்தல் முன்னெச்சரிக்கை 35 பேர் மீது வழக்கு பதிவு
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் நேரத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு, போலீசார் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரியில் உள்ள போலீஸ் நிலையங்களில் குற்றப்பின்னணியில் உள்ள ரவுடிகள், அடிதடி வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் சேதராப்பட்டு, ரெட்டியார்பாளையம், அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் தலா, 5 பேர் உட்பட பல்வேறு நிலையங்களில் ரவுடிகள், அடிதடி குற்றவாளிகள் என, 35 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.