உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்துறை இளநிலை பொறியாளர் எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு

மின்துறை இளநிலை பொறியாளர் எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு

புதுச்சேரி : மின்துறையில் இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமார் ஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி மின்துறையில் இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த 8ம் தேதி, 6 தேர்வு மையங்களில் நடந்தது.இந்த பதவிகளுக்கு மொத்தம் 1,902 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில், முதல் தாள் தேர்வை 1,415 பேரும், இரண்டாம் தாள் தேர்வை 1,405 பேரும் எழுதினர். இந்த தேர்வை சுமுகமாக நடத்த 200க்கும் மேற்பட்ட அலுவலர்கள், ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், தேர்வு மையங்களில் முறைகேடுகளை தடுக்க ஜாமர் கருவிகளும், சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டன. அனைத்து தேர்வர்களும் பயோ மெட்ரிக் சரிபார்ப்பு செய்யப்பட்ட பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளின் விடைக்குறிப்பு https://recruitment.py.gov.inஎனும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதற்கான ஆட்சேபனைகள் கடந்த 9ம் தேதி மதியம் 3:00 மணி வரை பெறப்பட்டது. அனைத்து ஆட்சேபனைகளையும் ஆராய்ந்த பிறகு, விடைத்தாள்கள் திருத்தப்பட்டு தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை