உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மின் பணியாளர் சங்க ஆண்டு விழா

 மின் பணியாளர் சங்க ஆண்டு விழா

புதுச்சேரி: புதுச்சேரி மின் பணியாளர்கள் நல சங்க 2ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. முதலியார்பேட்டையில் நடந்த விழாவில், துணைத் தலைவர் பாஸ்கர் வரவேற்றார். சங்க தலைவர் பாலகுரு முன்னிலை வகித்தார். பள்ளி நிர்வாகி சரோஜா, மின் மீட்டர் விற்பனையாளர் சக்தி முருகன் துவக்கி வைத்தனர். சம்பத் எம்.எல்.ஏ., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் புருேஷாத்தமன், சமூக ஆர்வலர் சுந்தர்ராஜன் பங்கேற்றனர். விழாவில், மின் பணியாளர்கள் கருவி வாங்குவதற்கு மானிய கடன் வாங்கி தருவது உள்ளிட்ட பல கோரிக்கைகள் குறித்து பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ