விபத்தில் எலக்ட்ரீசியன் கால் விரல் துண்டானது
பாகூர்: பாகூர், குடியிருப்புபாளையம் சுப்பையா நகரைச் சேர்ந்தவர் நிதீஷ்குமார் 23. எலக்ட்ரீசியன். இவர் கடந்த 1ம் தேதி கிருமாம்பாக்கத்திற்கு, பைக்கில் சென்று கொண்டிருந்தார்.கிருமாம்பாக்கம் ஏரிக்கரை சுற்றுலாத் துறை கட்டடம் அருகே சென்றபோது, எதிரே வந்த கார், பைக் மீது மோதியது.இதில் கீழே விழுந்து படுகாயமடைந்த நிதீஷ்குமாரை, அருகில் இருந்தவர்க் மீட்டு கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலுார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்தில் அவரது வலது கால் சுண்டு விரல் நசுங்கி இருந்ததால் அதனை சிகிச்சையின் போது அகற்றினர். புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் கேரளாவைச் சேர்ந்த கார் டிரைவர் ஆனந்த்மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.