உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மொபைல்போனில் மின் கட்டண விபரம்: எம்.எல்.ஏ., கோரிக்கை

மொபைல்போனில் மின் கட்டண விபரம்: எம்.எல்.ஏ., கோரிக்கை

புதுச்சேரி : சட்டசபை பூஜ்ய நேரத்தில் ராமலிங்கம் எம்.எல்.ஏ., பேசியதாவது:மின் துறையில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வருவது ஏற்ப சேவைகளின் தரமும் உயர்த்தப்பட வேண்டும் என்பது நுகர்வோர்களின் கோரிக்கையாக இருந்து வருகின்றது. மின் நுகர்வோர்களுக்கு காலத்தோடு ரசீது தரப்படுவது இல்லை. குறிப்பிட்ட தேதிக்குள் மின் கட்டணம் செலுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் வீடுகளுக்கு மின்கட்டண ரசீது காலத்தோடு கிடைப்பது இல்லை. அதேபோல் வீடு பூட்டியுள்ளது உள்ளிட்ட பல்வேறு காரணங் களை கூறி, தோராயமாக மின் பயன்பாட்டை கணக்கீட்டு பில் போடுகின்றனர். தற்போது அனைத்து மின் நுகர்வோர்களும் மொபைல்போன் வைத்துள்ளனர். மின் கட்டண பில்லை தனியாக கொடுப்பது மட்டுமின்றி மொபைல்போனுக்கு அனுப்பி விடலாம். இந்த கோரிக்கை மின் துறை அமைச்சர் பரிசீலனை செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ