உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோர்ட்டில் மின்னணு மனு தாக்கல் நடைமுறைக்கு வந்தது

கோர்ட்டில் மின்னணு மனு தாக்கல் நடைமுறைக்கு வந்தது

புதுச்சேரி: புதுச்சேரி கோர்ட்டில் மின்னணு மனு தாக்கல் முறை கட்டாயமாக்கப்பட்டு, நடைமுறைக்கு வந்துள்ளது. சுப்ரீம் கோர்ட், ஈ கமிட்டி மின்னணு முறையில், புதிய நடைமுறையை கொண்டுவந்துள்ளது. இதனை அனைத்து ஐகோர்ட், மாவட்ட நீதி மன்றங்களில் பின்பற்ற உத்தரவிட்டப்பட்டுள்ளது. நீதி மன்றத்திற்கு நேரில் செல்லாமல், தங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே வழக்குகளை பதிவு செய்யலாம். இந்த மின்னணு தாக்கல், காதிதமில்லாத நடைமுறையை ஊக்குவிக்கும். இந்நிலையில், புதுச்சேரி நீதிமன்றங்களில், மின்னணு வழக்கு தாக்கல் முறை கட்டாயமாக்கப்பட்டு, நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இது தொடர்பாக, ஐகோர்ட் பதிவாளர் அல்லி வெளியிட்டுள்ள உத்தரவில், சுப்ரீம் கோர்ட் மின்னணு குழுவால் உருவாக்கப்பட்ட மின்னணு தாக்கல் போர்ட்டலில்,மாவட்ட நீதித்துறையில் உள்ள அனைத்து வழக்கு வகைகளின் விண்ணப்பங்கள், மனுக்கள், ஆவணங்களுக்கு மின்னணு தாக்கல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள், பயிற்சிகள் சென்னை ஐகோர்ட் இணையதளத்தில் உள்ளது. வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள், கட்சியினர் இந்த மின்னணு தாக்கல் செய்யும் வசதியை, பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை