உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கப்ளாம்பாடியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

 கப்ளாம்பாடியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை அடுத்த கப்ளாம்பாடி கிராமத்தில் குந்தலம்பட்டு செல்லும் ஓடையில் ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியைச் சேர்ந்த 6 பேர் நெல் சாகுபடி செய்தும், இரும்பு ஷீட் கூரையுடன் 2 வீடுகள், மாட்டு கொட்டகை அமைத் தும் ஆக்கிரமித்திருந்தனர். இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட் உத்தரவின்பேரில், மேல்மலையனுார் தாசில் தார் (பொறுப்பு) வெங்கடேசன் தலைமையில் ஓடைப்பகுதி ஆக்கிரமிப்புகள் பொக்லைன் மூலம் அகற்றும் பணி நேற்று நடந்தது. அவலுார்பேட்டை இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சி பி.டி.ஓ., ஏகாம்பரம், மண்டல துணை தாசில்தார் ரவி, வருவாய் ஆய்வாளர் சசிகலா, சர்வேயர் இந்திரகுமார், வருவாய் துறையினர், தீயணைப்பு நிலையத்தினர், மின்வாரியத்தினர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி