மேலும் செய்திகள்
வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல்: 3 பேர் மீது வழக்கு
29-Sep-2025
புதுச்சேரி: மொபைல் போன் பார்த்ததை தந்தை கண்டித்ததால், கல்லுாரி மாணவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேல்ராம்பேட், திருப்பூர் குமரன் நகரை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் கார்த்திகேயன், 19; கிருமாம்பாக்கததில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். அவர், நண்பர்களுடன் வெளியே சென்று விட்டு நீண்டநேரம் கழித்து வீட்டுக்கு வருவது வழக்கம். மேலும், அடிக்கடி மொபைல் போன் பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 11:30 மணி வரை மொபைல் போன் பார்த்ததால், அவரது தந்தை கண்டித்தார். இதனால் மனமுடைந்த கார்த்திகேயன், அறையில் மின் விசிறியில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
29-Sep-2025