மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி நிறைவு
11-Apr-2025
புதுச்சேரி : தட்டாஞ்சாவடி அரசு தொடக்கப்பள்ளியில் தில்ஷா பவுண்டேஷன் மற்றும் இ.எல்.எப்., சார்பில் ஆங்கில பயிற்சி நிறைவு விழா நடந்தது.விழாவை, கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் கீதா வரவேற்றார். விழாவில், வட்டம்-1, பள்ளி துணை ஆய்வாளர் அனிதா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் நாகராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.இதில், கலெக்டர் குலோத்துங்கன் வகுப்பு வாரியாக மாணவர்களின் ஆங்கில கற்றல் திறனை ஆய்வு செய்து பாராட்டினார்.விழாவில், பள்ளியின் ஆசிரியர்கள் நித்யா, மஞ்சுளா, பிரேமா, காயத்ரி, மாரியம்மா, ரேவதி, தமிழரசி, அருணா, கன்னிகா, உமாதேவி, கீதா மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
11-Apr-2025