உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நவோதயா வித்யாலயாவில் சேர புதுச்சேரியில் நுழைவு தேர்வு

நவோதயா வித்யாலயாவில் சேர புதுச்சேரியில் நுழைவு தேர்வு

புதுச்சேரி : புதுச்சேரி நவோதயா வித்யாலயாவில், 9 மற்றும் பிளஸ்1 வகுப்புகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு நுழைவுத் தேர்வு நடந்தது.இதுகுறித்து புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கி வரும் ஜவகர் நவோதயா வித்யாலயா முதல்வர் கண்ணதாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி ஜவகர் நவோதயா வித்யாலயாவில், 2025-2026ம் கல்வி ஆண்டில் 9 மற்றும் பிளஸ்1 வகுப்புகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் நுழைவு தேர்வு பெரிய காலாப்பட்டில் உள்ள ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியில் நடந்தது.இதில், 9ம் வகுப்பில் சேர்வதற்காக விண்ணப்பித்த 241 மாணவர்களில் 183 மாணவ மாணவிகளும், பிளஸ் 1 வகுப்பில் சேர்வதற்காக விண்ணப்பித்த 223 பேரில் 161 மாணவ மாணவிகளும் தேர்வு எழுதினர்.பள்ளி முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் நடைபெற்ற தேர்வுகளை புதுச்சேரி கல்வித் துறையின், முதன்மை கல்வி அதிகாரி மோகன் ஆய்வு செய்தார்.ஏற்பாடுகளை தேர்வுத்துறை பொறுப்பாளர் பாபுராஜ் ஜெயின் தலைமையில் ஆசிரியர் சண்முகம் மற்றும் ஆசிரிய - ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ