உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிள்ளையார்குப்பத்தில் சமத்துவ பொங்கல் விழா 

பிள்ளையார்குப்பத்தில் சமத்துவ பொங்கல் விழா 

பாகூர் : பிள்ளையார்குப்பதில், எவர்கிரீன் நிறுவனம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.பிள்ளையார்குப்பம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக பிள்ளையார்குப்பம் எவர்கிரீன் நிறுவனரான, புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளரான ரமேஷ், தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார்.அப்பகுதி மகளிர் குழுவினர் மண் பானையில் பொங்கல் வைத்து, சமத்துவ பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர். பெண்கள், இளைஞர், சிறுவர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும், தம்பதிகளுக்குள் உள்ள புரிதல் தொடர்பாக 10 கேள்விகள் கேட்கப்பட்டன. இதில், ஒருமித்த பதிலை கூறிய தம்பதி சிறந்த தம்பதியாக தேர்வு செய்து சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ