| ADDED : பிப் 26, 2024 05:05 AM
புதுச்சேரி: புதுச்சேரி அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது முற்றிலும் தவறானது என முன்னாள் எம்.பி., ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை:வரும் லோக்சபா தேர்தலால் முழு பட்ஜெட்டை சமர்ப்பிக்கவில்லை என்ற காரணத்தை ஏற்க முடியாது.சட்டசபை அடுத்த ஐந்து மாதங்களுக்கு செலவு செய்வதற்கு ரூ. 4,634 கோடிக்கு ஒப்புதல் பெற்றுள்ளார். சம்பளம், வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுதல், மானியம், நிவாரணம், போன்ற இனங்களுக்கு இந்த தொகை செலவிடப்படும். விவசாயம், மீன்வளம், கால்நடை, தொழில்கள், குடிநீர், மின்சாரம், போக்குவரத்து, போன்ற வளர்ச்சிக்குத் தேவையான அகக்கட்டுமானத்தை உருவாக்குவதற்கான மூலதன செலவு இதில், வராது.இந்த ஐந்து மாதங்களில் வளர்ச்சித் திட்டம் எதுவும் கிடையாது. ஆகஸ்ட் மாதம் வர இருக்கும் பட்ஜெட் மீதி உள்ள ஏழு மாதங்களுக்குத் தான். அதிலும் வளர்ச்சித் திட்டங்கள் இருக்கப் போவதில்லை. புதுச்சேரியின் வளர்ச்சியை சூனியம் ஆக்குவதற்குத்தான் இந்த இடைக்கால பட்ஜெட்.லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி வருகிறது . 53 சதவீத மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளதாக அரசு கூறுகிறது. இவர்களுக்கெல்லாம் இந்த இடைக்கால பட்ஜெட் நிவாரணம் அளிக்கவில்லை.மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை சமர்ப்பித்துள்ளது சரியானது. ஆனால் புதுச்சேரி அரசு செய்துள்ளது முற்றிலும் தவறானது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.