உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாஜி சப் கலெக்டர் மீண்டும் சிறையில் அடைப்பு மோசடி பணத்தில் உல்லாச வாழ்க்கை அம்பலம்

மாஜி சப் கலெக்டர் மீண்டும் சிறையில் அடைப்பு மோசடி பணத்தில் உல்லாச வாழ்க்கை அம்பலம்

காரைக்கால்: கோவில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மாஜி சப் கலெக்டர் ஜான்சன், மோசடி பணத்தில் உல்லாசமாக வாழ்ந்ததை போலீசார் விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளார்.காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து கிராமத்தில் உள்ள பார்வதீஸ்வர சுவாமி கோவில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சப் கலெக்டர் ஜான்சனை, தனிப்படை போலீசார், கோர்ட் அனுமதியுடன் கடந்த 16ம் தேதி 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க துவங்கினர். மூன்று நாட்கள் எதுவும் தெரியாது என மழுப்பி வந்தார். அதனையொட்டி போலீசார், இவ்வழக்கில் ஏற்கனவே கைதாகி, புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நில அளவையர் ரேணுகாதேவியை மீண்டும் 2 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில், கோவில் நிலத்தில், 2.5 ஏக்கர் நிலத்தை 164 மனைகளாக பிரித்து பாதி மனைகளை தலா 10 லட்சம் ரூபாயிற்கும், மீதமுள்ள மனைகளுக்கு முன்பணமாக தலா 3 லட்சம் ரூபாய் வசூலித்ததும், இதற்கு லஞ்சமாக சப் கலெக்டருக்கு பல லட்சம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தார்.அதனடிப்படையில், ஜான்சனிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியதில், லஞ்சமாக பெற்ற பணத்தை உல்லாசமாக செலவிட்டதாக தெரிவித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து போலீசார், நேற்று மாலை 5:30 மணிக்கு ஜான்சனை, மாஜிஸ்திரேட் லிசி முன் ஆஜர்படுத்தி மீண்டும் காரைக்கால் சிறையில் அடைத்தனர். ரேணுகாதேவியை புதுச்சேரி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான என்.ஆர். காங்., பிரமுகர் ஜேசிபி ஆனந்தை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ