உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாராயக் கடைகளில் கிஸ்தி நிலுவை; குத்தகைதாரர்களின் சொத்துகள் ஏலம் கலால் துறை அதிரடி அறிவிப்பு

சாராயக் கடைகளில் கிஸ்தி நிலுவை; குத்தகைதாரர்களின் சொத்துகள் ஏலம் கலால் துறை அதிரடி அறிவிப்பு

கிஸ்தி தொகை நிலுவை வைத்துள்ள சாராயக்கடை, கள்ளுக்கடை குத்தகைதாரர்களின் சொத்துகளை அடுத்த மாதம் ஏலம் விடப்படும் என கலால் துறை அறிவித்துள்ளது. புதுச்சேரி கலால் துறை சார்பில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சாராயக்கடைகள், கள்ளுக்கடைகள் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுகின்றது. முதலாம் ஆண்டு ஏலம் எடுத்தவர்கள் அடுத்த 2 ஆண்டுகள் கிஸ்தி தொகையை 5 சதவீதம் உயர்த்தினால், அவர்களே தொடர்ந்து கடையை நடத்தலாம். 3 ஆண்டு முடிவில் முழுமையாக பொது ஏலம் விடப்படும்.ஏலம் எடுப்பவர்களிடம் கிஸ்தி தொகைக்காக சொத்து ஜாமின் பெறப்படும். ஏலம் எடுப்பவர்கள் கிஸ்தி தொகை பாக்கி வைத்தால், அந்த சொத்துகளை ஏலம் விட கலால் துறை நடவடிக்கை எடுக்கும். எனவே கடைகளை ஏலம் எடுத்தவர்கள் கிஸ்தி தொகையை செலுத்தி ஏலத்தை தவிர்ப்பார்கள். இந்நிலையில், தற்போது கலால் துறை 2019-20, 2020-21, 2021-22 ஆகிய ஆண்டுகளில் சாராய கடைகள், கள்ளுக்கடைகள் நடத்தி நிலுவை கிஸ்தி பாக்கி தொகையை வசூலிக்கும் கலால் துறை முடிவு செய்துள்ளது.குத்தகைதாரர் ஜாமின்தாரர் கொடுத்துள்ள அசையா சொத்துகளான நிலம், மனை, வீடு, வருவாய் வசூல் சட்டத்தின் ஏலம் விட நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான ஏலம் அக்.,16 மற்றும் 23ம் தேதி www.eaution.gov.in என்ற ஆன்லைன் மூலமாக விடப்பட்டுள்ளது.இந்த பொது ஏலத்தில் இந்த சொத்துகள் அதிக தொகைக்கு ஏலம் எடுப்போருக்கு விற்கப்பட்டு, அதன் வாயிலாக பாக்கி தொகை வசூல் செய்யப்பட உள்ளது என கலால் துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி