மதுபானக் கடைகள் ஆன்லைனில் வரி செலுத்த கலால்துறை உத்தரவு
புதுச்சேரி: மதுபான கடைகள் ஆன்லைன் மூலம் வரி செலுத்த வேண்டும் என, கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரியில் உள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபான மொத்த விற்பனை கடைகள், கலால் இணையதளம் மூலம் அணுமதிக்கு விண்ணப்பிக்கும்போது கலால் வரியை இணைய வங்கி சேவை மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். வங்கிகளில் சலான் மூலம் பணம் செலுத்துவது இனி ஏற்கப்படாது. இந்த உத்தரவு அமலுக்கு உடனடியாக அமலுக்கு வருகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.