மேலும் செய்திகள்
மாட்டு வண்டிகள் மக்கி வீணாகும் அவலம்
21-Oct-2024
அரியாங்குப்பம் : பொதுமக்களை அச்சுறுத்தி வந்த விஷ வண்டுகளை தீயணைப்பு படையினர் அழித்தனர்.வீராம்பட்டினம் சாலையில் உள்ள பனை மரம் ஒன்றில் விஷ வண்டுகள் (கதண்டு) கூடு கட்டி அவ்வழியாக செல்பவர்களை கடித்து, அச்சுறுத்தி வந்தன. இதனால், இரவு நேரங்களில் பொதுமக்கள் அவ்வழியாக செல்வதற்கு அச்சமடைந்தனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், புதுச்சேரி தீயணைப்பு படையினருடன், கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு விஷ வண்டு கூட்டை தீயிட்டு அழித்தனர். அப்போது, வீராம்பட்டினம் - அரியாங்குப்பம் சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
21-Oct-2024