உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி

கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி: புதுச்சேரி, இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லுாரி, கண் மருத்துவத் துறை சார்பில், தேசிய கண் தான இருவார விழாவையொட்டி, 41-வது கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கண் மருத்துவத் துறைத் தலைவர் தணிகாசலம் வரவேற்றார். மருத்துவக் கண்காணிப்பாளர் ரமேஷ் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். குடியிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாதன், மக்கள் தொடர்பு அதிகாரி பிரதாப் மற்றும் குறைதீர் அலுவலர் ரவி ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில், கண் தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்தினர், தன்னார்வலர்களின் சேவையைப் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். கண் தான விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. புதுச்சேரி ஜோதி கண் மருத்துவமனை டாக்டர் ஷரண்யா, ‘கருவிழிப் பார்வையிழப்பைத் தடுப்பது’ என்ற தலைப்பிலும், அரவிந்த் கண் மருத்துவமனையின் கருவிழி சிறப்பு டாக்டர் நவீன், ‘கண் தானம் மற்றும் கண் வங்கி’ என்ற தலைப்பிலும், டாக்டர் குமார், ‘உடல் உறுப்பு மற்றும் திசு தான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதில் மாநில உடல் உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு பங்கு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், டாக்டர்கள் செந்தமிழானே ரெனே, அர்ச்சனா தலைமையில் கண் தானம் மற்றும் கண் நலம் தொடர்பான கலந்துரையாடல் வினாடி – வினா நடந்தது. டாக்டர் அஷ்வினி தொகுத்து வழங்கினார். டாக்டர் போஸ்கோ ஒருங்கிணைத்தார். டாக்டர் கவிதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்