மேலும் செய்திகள்
தீபாவளிக்கு கூடுதலாக 1,000 ஆம்னி பஸ்கள்
23-Oct-2024
புதுச்சேரி : தீபாவளி பண்டிகையொட்டி, ஆம்னி பஸ்களில், கட்டணம் அதிகமாக இருந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சிடைந்தனர்.புதுச்சேரியில், தமிழகம் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு இடங்களில் வேலை செய்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையொட்டி, தொடர் விடுமுறையால், அவரவர் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். புதுச்சேரியில் இருந்து மற்ற பகுதிகளுக்கு செல்ல பொதுமக்கள் ரயிலை விட பஸ்சை நம்பியுள்ளனர்.இந்நிலையில், தீபாவளியையொட்டி, ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகமாக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் இருந்து, திருநெல்வேலிக்கு வழக்கமான கட்டணம் 900 முதல், 1,300 ரூபாய் வரை இருக்கும். ஆனால், பண்டியையொட்டி, 2,500 முதல், 6,000 ஆயிரம் வரையும், அதே போல, மதுரைக்கு, வழக்கமான நாட்களில், 600 முதல், 900 வரை இருக்கும். ஆனால், தீபாவளியையொட்டி, 2,000 முதல், 3,500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.மேலும், கர்நாடக அரசு சிறப்பு பஸ்சில், பெங்களூரு செல்ல 1,500 ரூபாயை கட்டணம் வசூல் செய்யப்பட்டது. பண்டிகையொட்டி ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகமாக இருந்ததால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
23-Oct-2024