உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

புதுச்சேரி; மகளை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் செய்தார்.முதலியார்பேட்டையை சேர்ந்தவர் ஜெயராஜ் மகள் துர்கா, 17; மதகடிப்பட்டு தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில், முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லுாரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். அவரது பெற்றோர் வெளியில் சென்று விட்டு, மாலையில் வீடு திரும்பியபோது அவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து, ஜெயராஜ் கொடுத்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ