உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

புதுச்சேரி : மகளை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் செய்தார்.மயிலாடுதுறை அடுத்த செம்பனார்கோவில் பகுதியை சேர்ந்தவர் களிதாஸ் மகள் அகிலா, 23. இவரை, அதே பகுதியை சேர்ந்த குருமூர்த்தி என்பவர், புதுச்சேரி சின்னவாய்க்கால் பகுதியை சேர்ந்த புகழேந்தி என்பவர் வீட்டு வேலைக்கு அனுப்பி வைத்தார். அங்கு வேலை செய்த, அவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து காணாமல் போனார்.வீட்டின் உரிமையாளர், அப்பெண்ணின் தந்தைக்கு தகவல் தெரிவித்தார். அதையடுத்து, பெண்ணின் தந்தை ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி