உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மகள் வீட்டிற்கு வந்த தந்தை சாவு

மகள் வீட்டிற்கு வந்த தந்தை சாவு

புதுச்சேரி: தீபாவளிக்கு மகள் வீட்டிற்கு வந்த தந்தை மது அருந்தி பரிதாபமாக இறந்தார். வானுார் அடுத்த உப்பு வேலுாரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி,74; குடிபழக்கம் உள்ள இவர், புதுச்சேரி கிருஷ்ணா நகரில் உள்ள மகள் வீட்டிற்கு நேற்று வந்தார். அப்போது அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு, நேற்று மாலை கிருஷ்ணா நகரில் மயங்கி விழுந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரவித்தனர். புகாரின்பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !