மேலும் செய்திகள்
சிறப்பு வழிபாடு
04-Sep-2025
புதுச்சேரி: புதுச்சேரியில், பெட்ரோல் பங்கில் ரூ.29.87 லட்சம் கையாடல் செய்த தந்தை, மகனை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி, பாரதி வீதியை சேர்ந்தவர் ராமலிங்கம்,74. இவர், கணபதி செட்டிக்குப்பம் இ.சி.ஆரில் கே.பி.என். ஏஜென்சி பெயரில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். அங்கு, ராமலிங்கத்தின் உறவினரான பிள்ளைச்சாவடி, பிள்ளையார் கோவில் தெரு அய்யனாரப்பன், அவரது மகன் ரஞ்சித் ஆகியோர்கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் முதல் 2022ம் ஆண்டு ஆகஸ்ட் வரை மேலாளர்களாக பணியாற்றி வந்துள்ளனர். அதில், இருவரும் பெட்ரோல் பங்கின் வரவு - செலவு கணக்குகளை சரி பார்ப்பதும், பங்கில் வரும் வருமானத்தை வங்கி கணக்கில் செலுத்தும் பணியை கவனித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு இறுதியில் பெட்ரோல் பங்கின் ஆண்டு வருமான கணக்கை சரிபார்த்தபோது, 29 லட்சத்து 87 ஆயிரத்து 677 ரூபாயை கணக்கில் முரண்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து அவர்களிடம் விசாரித்தபோது, பங்கில் முறைகேடு செய்து தவறாக கணக்கு எழுதி இருவரும் சேர்ந்து பணத்தைகையாடல் செய்ததுதெரியவந்தது. ராமலிங்கம் புகாரின் பேரில், காலாப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் அய்யனாரப்பன், ரஞ்சித் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
04-Sep-2025