உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆசிரியர்களுக்கு பணி ஆணை அரசுக்கு கூட்டமைப்பு நன்றி

ஆசிரியர்களுக்கு பணி ஆணை அரசுக்கு கூட்டமைப்பு நன்றி

புதுச்சேரி : பள்ளிகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து ஆணை வழங்க உதவிய கவர்னர் மற்றும் அதிகாரிகளுக்கு கூட்டமைப்பு தலைவர் எட்வர்டு சார்லஸ் நன்றி தெரிவித்துள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேச பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு தலைவர் எட்வர்டு சார்லஸ் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி அரசின் பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் பதவிகளுக்கு கடந்த மார்ச் மாதம் ௧௮௦ பேர் நியமிக்கப்பட்டனர். மீதியுள்ள காலி பணியிடங்களில் தகுதி வாய்ந்த 10 பேருக்கு முதல்வர் ரங்கசாமி பணிநியமன ஆணையை வழங்கியள்ளார். இதற்காக கவர்னருக்கும், உடனடியாக நடவடிக்கைகள் எடுத்த அமைச்சர், தலைமை செயலர், கல்வித்துறை செயலர், இயக்கு நருக்கும் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை