உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜென்மராக்கினி பேராலயத்தில் பெருவிழா கொடியேற்றம்

ஜென்மராக்கினி பேராலயத்தில் பெருவிழா கொடியேற்றம்

புதுச்சேரி : புனித ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் பங்கு பெருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.புதுச்சேரி, மிஷன் வீதியில் உள்ள புனித ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தின், 333வது பங்கு பெருவிழாவை முன்னிட்டு, நேற்று மாலை, கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு விருந்தினராக, ரோம் நகரில் இருந்து வந்த, இந்திய துாதுவர் லியோ போல்டே ஜெரலி கொடியேற்றத்தை துவக்கி வைத்தார். புதுச்சேரி - கடலுார் மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் முன்னிலை வகித்தார்.பேராலயத்தின் பங்கு தந்தை ரொசாரியோ தலைமை தாங்கினார். இவ்விழாவை தொடர்ந்து, வரும் 7ம் தேதி முதல், சிறிய தேர் பவனி மற்றும் திருப்பலி நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய விழாவான, 8ம் தேதி காலை 6:30 மணிக்கு கூட்டு திருப்பலி நிகழ்ச்சியும், மாலை 6:30 மணிக்கு ஆடம்ப தேர்பவனி விழா நடக்கிறது. 9ம் தேதி, கொடியிறக்க நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி