உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கல்

அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கல்

திருக்கனுார் : திருக்கனுார் லயன்ஸ் சங்கம் சார்பில் இருதய அறுவை சிகிச்சைக்கு மருத்துவ நிதியுதவியாக ரூ.30 ஆயிரம் பயனாளிக்கு வழங்கப்பட்டது. திருக்கனுாரை சேர்ந்த சிராஜ் நிஷா வறுமையின் காரணமாக தனது இருதய அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்குமாறு லயன்ஸ் சங்கத்தினரிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, திருக்கனுார் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் ஒன்றிணைந்து நிதி வசூல் செய்து, மருத்துவ நிதியுதவியாக ரூ. 30 ஆயிரத்தை சங்கத் தலைவர் இளங்கோவன் தலைமையில் சிராஜ் நிஷாவிடம் வழங்கினர். இதில், சங்க மாவட்டத் தலைவர்கள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !