கட்டுமான பணி மேற்கொள்வோர் விதிமீறலில் ஈடுபட்டால் அபராதம்
உழவர்கரை ஆணையர் சுே்ரஷ்ராஜ் எச்சரிக்கைபுதுச்சேரி: கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் வீட்டின் உரிமையாளர்கள் ஒப்பந்ததாரர்கள், விதிமீறல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் செய்திக் குறிப்பு; உழவர்கரை நகராட்சி பகுதிகளில் கட்டுமான பணிகளை மேற்கோள்பவர்கள் கட்டுமான பொருட்களை கால்வாய்கள் மீது, சாலைகளை ஆக்கிரமித்து வைப்பதால், அப்பகுதிகளில் கால்வாய்களில் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. கடந்த வாரம் பெய்த கனமழையின் போது பல இடங்களில் கால்வாய்களில் கட்டுமான பொருட்களினால் தேக்கம் ஏற்பட்டு பாதிப்புகள் ஏற்பட்டதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வருகின்றன. எனவே கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் வீட்டின் உரிமையாளர்கள் ஒப்பந்ததாரர்கள், கட்டுமான பொருட்களை கால்வாய்களில் கழிவு நீர் மற்றும் மழை நீர் தடையின்றி செல்லும் வகையிலும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாமலும் வைக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது. தவறினால் நகராட்சி ஊழியர்கள் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் ஆய்வு செய்து, விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உடனடி அறிவிக்கை வழங்கி அபராதம் விதிக்கப்படும். மேற்கூறிய விதி மீறல்கள் தொடர்பாக புகார்களை புகைப்படம் மற்றும் முகவரியுடன் நகராட்சியின் 7598171674 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் பொது மக்கள் தெரிவிக்கலாம்.