டிராக்டர்களுக்கு அபராதம்
புதுச்சேரி: நுாறடி சாலையில் ஆவணங்கள் இன்றி இயங்கிய டிராக்டர்களை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர்.புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை எதிரே வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப் இன்ஸ்பெக்டர் பாலசந்தர் தலைமையில் போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியாக வந்த இரண்டு ட்ரெய்லர்களில் செங்கல் ஏற்றி வந்த டிராக்டர்களை தடுத்து நிறுத்தி ஆவணங்களை ஆய்வு செய்தனர். அதில், ஆவணங்கள் இன்றி இயங்கிய டிராக்டர்களுக்கு அபராதம் விதித்தனர்.மேலும், அவ்வழியாக அதிவேகமாக இயங்கப்பட்ட பைக்குகள், கார்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.