ஓட்டலில் தீ விபத்து
புதுச்சேரி: புதுச்சேரி வள்ளலார் சாலையை சேர்ந்தவர் அப்துல். இவர் அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டல் சமையல் கூடத்தில் நேற்று இரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் புதுச்சேரி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள், தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் துரித முயற்சியால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.