மேலும் செய்திகள்
பழங்குடியின தொழிலாளி இறப்பில் சந்தேகம்
07-Oct-2026
புதுச்சேரி: முதலியார்பேட்டையில் பூட்டிய வீட்டில் தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலியார்பேட்டை பிராமணர் வீதியில் நீண்டநாட்களாக பூட்டியிருந்த வீட்டில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதியினர், புதுச்சேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த நிலைய அதிகாரி சுகுமார் தலைமையிலான தீயணைப்பு துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று தீயை அனைத்தனர். மேலும் அவர்களின் விசாரணையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது. பூட்டிய வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
07-Oct-2026