உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிப்.9ம் தேதி தீயணைப்பு துறை தேர்வு

பிப்.9ம் தேதி தீயணைப்பு துறை தேர்வு

புதுச்சேரி: புதுச்சேரி தீயணைப்பு துறையில் காலியாக உள்ள தீயணைப்பு வீரர் மற்றும் ஓட்டுனர் பணியிடத்திற்கான தேர்வு வரும் பிப்., 9ம் தேதி நடக்கிறது.இதுகுறித்து அரசு சார்பு செயலர் (தேர்வு பிரிவு ) ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி தீயணைப்பு துறையில், தீயணைப்பு வீரர் மற்றும் தீயணைப்பு ஓட்டுனர் நிலை -3 பணியிடத்திற்கான தேர்வு வரும் பிப்., 9ம் தேதி புதுச்சேரியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வுகளுக்கான அனுமதி சீட்டு பதிவிறக்கம், தேர்வு மையங்கள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை