உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பட்டாசு வழங்கிய முதல்வர்: உற்சாகத்தில் குழந்தைகள்

பட்டாசு வழங்கிய முதல்வர்: உற்சாகத்தில் குழந்தைகள்

புதுச்சேரி: வீட்டின் முன் திரண்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு முதல்வர் ரங்கசாமி தீபாவளி பட்டாசு பாக்ஸ் வழங்கி வாழ்த்து தெரிவித்ததால் மகிழ்ச்சியடைந்தனர்.தீபாவளிகை பண்டிகையொட்டி முதல்வர் ரங்கசாமியை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள்., அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலபதிர்கள் என பல்வேறு தரப்பினரும் நேரில் சந்தித்து பட்டாசுகள், இனிப்புகள் கொடுத்து வாழ்த்து பெற்று செல்வது வழக்கம்.இந்த பட்டாசு பாக்ஸ்கள், இனிப்புகளை முதல்வர் ரங்கசாமி அப்படியே குழந்தைகளுக்கும் கொடுத்துவிடுவார்.இதனால் ஆண்டுக்காண்டு தீபாவளிக்கு முன் முதல்வரின் பட்டாசு பாக்ஸ் எதிர்பார்த்து குழந்தைகள் குவிந்துவிடுவர். இந்தாண்டு அவரது வீட்டின் முன் தீபாவளி பட்டாசுக்காக ஆயிரக்கணக்கான குழந்தைகள் பெற்றோருடன் குவிந்தனர். அவர்களுக்கு பொறுமையாக பட்டாசு பாக்ஸ்கள், வழங்கிய முதல்வர் ரங்கசாமி, தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தனர். உற்சாகத்தில் குதுாகலித்த குழந்தைகள் முதல்வர் ரங்கசாமிக்கு வாழ்த்துகளை தெரிவித்து, பட்டாசு பாக்ஸ்களுடன் வீட்டிற்கு புறப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ