புதிய குற்றவியல் சட்டங்கள் அமல் முதலாம் ஆண்டு நிறைவு விழா
புதுச்சேரி, :புதுச்சேரி காவல்துறை சார்பில் மத்திய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டதன் முதலாம் ஆண்டு நிறைவு விழா, கம்பன் கலையரங்கில் நேற்று நடந்தது. விழாவை, முதல்வர் ரங்கசாமி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து, மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தப்பட்ட பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆண்டு மலர் புத்தகத்தை வெளியிட்டார். மேலும் அது தொடர்பான காணொலி காட்சி திரையிடப்பட்டது. விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., தலைமை செயலாளர் சரத் சவுகான், உள்துறை செயலர் கேசவன், டி.ஜி.பி., ஷாலினி சிங், தலைமைத் தேர்தல் அதிகாரி ஜவஹர், கலெக்டர் குலோத்துங்கன், போலீசார் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் வரவேற்றார்.சீனியர் எஸ்.பி., கலைவாணன் நன்றி கூறினார்.