மேலும் செய்திகள்
வெள்ளி விழா பிரம்மாண்ட தள்ளுபடி!
18-Sep-2026
புதுச்சேரி: புதுச்சேரி ரூபா எலக்ட்ரானிக்சில், ஆண்டு விழாவையொட்டி சிறப்புசலுகையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. புதுச்சேரி, திருவள்ளுவர் சாலையில் உள்ள ரூபா எலக்ட்ரானிக்ஸ் ஷோரூம் முதலாம் ஆண்டு தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏ. கார்த்திகேயன், சாரதா கங்காதரன் கல்லுாரி சேர்மன் சுவாமிநாதன் பங்கேற்றனர். ஷோரூம் பங்குதாரர்கள் குமரன், சரவணன், மோகன்வேலு, ரவி ராஜன், அரவிந்த் ஆகியோர் வரவேற்றனர். விழாவையொட்டி வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உப யோகப் பொருட்கள் மற்றும் பர்னிச்சர்களுக்கு சிறப்பு, தள்ளுபடி மற்றும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தரமான பர்னிச்சர் மற்றும் கிச்சன் அப்ளையன்சஸ் பொருட்களுக்கு 60 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. தவணை முறையில் வாங்கும் பொருட்களுக்கு, வட்டி மற்றும் ஆவணங்களுக்கான பரிசீலனை கட்டணம் கிடையாது. கேஷ் பேக் சலுகைகள் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் உண்டு. 5,000 ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் அன்பளிப்பு வழங்கப்படும். இந்த வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பயன் படுத்திக் கொள்ளுமாறு ஷோரூம் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனங்களை நிறுத்த விசாலமான பார்க்கிங் வசதி உள்ளது.
18-Sep-2026