உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / செவிலியர் கல்லுாரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா

செவிலியர் கல்லுாரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா

புதுச்சேரி: விவேகானந்தா செவிலியர் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது. புதுச்சேரி விவேகானந்தா செவிலியர் கல்லுாரியில் பி.எஸ்சி., நர்சிங் முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள் துவக்க விழா நடந்தது. விழாவிற்கு, விவேகானந்தா கல்விக்குழு தலைவர் பத்மா தலைமை தாங்கி, சமுதாயத்தில் செவிலியர்களின் பங்கு குறித்து பேசினார். கல்லுாரி முதல்வர் பரணி செவிலியர்களின் முக்கியத்துவம், வேலை வாய்ப்பு, கல்லுாரியின் விதிமுறைகள் குறித்து விளக்கி பேசினார். இதில், முதலாம் ஆண்டு செவிலியர் மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கல்லுாரியின் துணை முதல்வர் விருதசாரணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை