மேலும் செய்திகள்
மூதாட்டி தற்கொலை
12-Jan-2026
அரியாங்குப்பம்: வீட்டில் கீழே விழுந்து மீனவர் இறந்தது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மணவெளி அண்ணா நகரை சேர்ந்தவர் சேகர், 56; மீனவர். குடிப்பழக்கம் இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்றனர். அப்போது, அவர் மட்டும் தனியாக இருந்தார். நாற்காலியில் உட்கார்ந்திருந்த அவர், கீழே விழுந்து சுயநினைவின்றி கிடந்தார். அவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
12-Jan-2026