உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்

புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 336ம் ஆண்டு பெருவிழாவையொட்டி, கொடியேற்றம் நிகழ்ச்சியில், ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். ஆரோக்கிய அன்னை ஆலய வளாகத்தில் நேற்று காலை நடந்த கொடியேற்ற நிகழ்ச்சியில், ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து, மாலை திருப்பலி மற்றும் தேர்பவனி நடந்தது. இந்நிகழ்ச்சியை அடுத்து வரும் 12ம் தேதி வரை, ஆலயத்தில் தினந்தோறும் காலையில் திருப்பலி, மாலையில் தேர்பவனி நிகழ்ச்சி நடக்கிறது.  முக்கிய விழாவான, 13ம் தேதி, காலை 6:00 மணிக்கு திருப்பலி, 7:30 மணிக்கு பெருவிழா திருப்பலி நிகழ்ச்சி, புதுச்சேரி – கடலுார் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் முன்னிலை நடைபெற உள்ளது. தொடர்ந்து, 11:00 மணிக்கு சிறப்பு திருப்பலி, மாலை 5:30 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நிகழ்ச்சி நடக்கிறது. அதனைத் தொடர்ந்து, 14ம் தேதி கொடியிறக்க நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்