உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பூக்கள் விலை உயர்வு

பூக்கள் விலை உயர்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு,பூக்கள் விலை பன்மடங்காக உயர்ந்துள்ளது.புதுச்சேரியில் நகர சந்தைகளில் கடந்த சில தினங்களாகபூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. அதேபோல, அதன்விலையும் வேகமாக உயர்ந்துள்ளது.நேற்று முன்தினம் சாமந்தி கிலோ ரூ.150,க்கும், பன்னீர் ரோஜா கிலோ ரூ.120,க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய கிலோரூ.200,க்கு விற்பனையானது. அதேபோல கிலோ,ரூ.160,க்கு விற்கப்பட்ட சாக்லேட் ரோஜா, ரூ.300,க்கு விற்பனையானது.கடந்த சில தினங்களாக, கிலோ ஒன்றுக்கு, முல்லை அரும்பு ரூ.400 விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று, ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்தது. ஒருகிலோ, ரூ.600,க்கு விற்பனையான மல்லிகை நேற்று ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. காட்டுமல்லியும், கிலோ ரூ.400, விற்பனையான நிலையில் நேற்று, ரூ.800 வரை விலை அதிகரித்தது. இது குறித்து வியபாரி ஒருவர் கூறுகையில், '' வழக்கமாகவே கார்த்திகை மாதத்தில் பூக்களின் விலை கணிசமாக அதிகரிக்கும்.தீப விழாவை முன்னிட்டு, மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கி சென்றனர். இன்றைய தினம் பூக்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது, '' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி