உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் மலர் படுகை தோட்டம்

தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் மலர் படுகை தோட்டம்

புதுச்சேரி: தாவரவியல் பூங்காவில் பூத்துக் குலுங்கும் மலர் படுகையை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். வடகிழக்கு பருவ மழை துவங்கி, புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, தாவரவியல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர் படுகை தோட்டத்தில், தற்போது பல்வேறு வகையான வண்ண மலர்கள் பூத்துக் குலுங்க துவங்கியுள்ளது. இதனால் தாவரவியல் பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பூத்து குலுங்கும் மலர் படுகையை பார்வையிட்டு மகிழ்வதுடன், சிலர் செல்பி எடுத்தும் கொள்கின்றனர். மேலும், காண்பவரை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மலர் படுகை தோட்டத்தை பார்வையிட மட்டுமே ஏராளமான சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவில் குவிந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ