உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நாட்டுப்புற கலை விழா

நாட்டுப்புற கலை விழா

பாகூர் : கன்னியக்கோவிலில் புதுவை அரசு கலை மாமணி விருதாளர் சங்கம் சார்பில், நாட்டுப்புற கலை விழா நடந்தது.துணைத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஜோதி செந்தில்கண்ணன், உறுப்பினர்கள் சேகர், பழனி, பெரியசாமி, ரங்கநாதன், ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சங்க உறுப்பினர் செல்வம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்.எல்.ஏ., பங்கேற்று நாட்டுப்புறக் கலையில் சிறந்து விளங்கிய கலைஞர்களுக்கு, கலை ரத்னா விருதுகளை வழங்கினார்.காப்பாளர் பூபேஷ்குப்தா, தலைவர் அரியபுத்திரி, பொருளாளர் சுவாமிநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பைரவி, ஜெகநாதன், தேவேந்திரன், துளசி கிருஷ்ணா ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர். விழாவையொட்டி, தெருக்கூத்து, சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது.நிறுவனர் தமிழ்வாணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை