உள்ளூர் செய்திகள்

அன்னதானம்

புதுச்சேரி : ராஜ்பவன் தொகுதி, ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமதி விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. இக்கோவிலில் தீமிதி விழா நடந்தது. அதனையொட்டி, கோவிலில் காங்., மாநிலச் செயலாளர் குமரன் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு அறங்காவலர் ரங்கராஜன், பிரசாதம் வழங்கினார். தொடர்ந்து, பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மாநிலச் செயலாளர் அன்னதானம் வழங்கினார். மாநிலச் செயலாளர் ராஜாராம், நிர்வாகிகள் முரளி, மனோகர், அன்பரசு, மோகன சுந்தரம், தமிழ்ச்செல்வன், ராஜேஷ், தினகர், சித்தானந்தன், கந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை