உணவு பாதுகாப்பு துறை விழிப்புணர்வு பயிற்சி
புதுச்சேரி: புதுச்சேரி உணவு பாதுகாப்பு துறை சார்பில், சாலையோர உணவு விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் மகாத்மா காந்தி பல் மருத்துவமனை வளாகத்தில் நேற்று துவங்கியது. உணவு பாதுகாப்பு துறை தலைவர் ரமேஷ் பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். இதில், போஸ்டாக் நிறுவன தொழில் நுட்ப இயக்குநர் பிரவீன் ஆண்ட்ரூஸ் கலந்து கொண்டு, உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பயிற்சிகள் அளித்தார். இதில், 200க்கும் மேற்பட்ட சாலையோர உணவு விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் நடக்கும் பயிற்சி முகாமில் பங்கேற்பவர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை மூலம் சான்றிதழ் வழங்கப்படுகிறது. முகாமிற்கான ஏற்பாடுகளை நியமன அதிகாரி பாலகிருஷ்ணன் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.