உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விபத்தில் புள்ளிமான் பலி வனத்துறை விசாரணை

விபத்தில் புள்ளிமான் பலி வனத்துறை விசாரணை

பாகூர் : கிருமாம்பாக்கம் அருகே புள்ளி மான் நேற்றிரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தது.புதுச்சேரி - கடலுார் சாலை கிருமாம்பாக்கத்தில், தனியார் பொறியியல் கல்லுாரி அருகே நேற்று முன்தினம் இரவு புள்ளி மான் ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் அடிபட்டு கிடப்பதாக கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு சென்ற போக்குவரத்து போலீசார் உயிரிழந்து கிடந்த புள்ளி மானை பார்வையிட்டு, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் இறந்த மானை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில் இருக்க கூடிய புள்ளி மான்கள் எப்படி கிருமாம்பாக்கம் பகுதியில் வந்தது என்று தெரியவில்லை. ஏற்கனவே இந்த பகுதிகளில் காட்டுப்பன்றிகள், முள்ளம்பன்றிகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது புள்ளிமான் சாலையில் அடிபட்டு இறந்து கிடந்தது இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ