மேலும் செய்திகள்
அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
22-Aug-2025
புதுச்சேரி : அங்கன்வாடி ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான பணிக்கொடை வழங்க அரசாணை வெளியிட்டதற்காக ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அங்கன்வாடிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு சேர வேண்டிய பணி கொடையை உடனே வழங்க வலியுறுத்தி, அரசு ஊழியர்களின் சம்மேளன கூட்டு இயக்கம் சார்பில், ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிகொடை வழங்குவது தொடர்பாக தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள், சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து நன்றி கூறினார். தொடர்ந்து, அரசு செயலர் கிருஷ்ணன் உப்பு, இயக்குநர் முத்துமீனா, நிர்வாக அதிகாரி சாந்தி ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தனர். அரசு ஊழியர்களின் சம்மேளன கூட்டு இயக்கத் தலைவர் செல்வம், செயலாளர் கணேசன், பொருளாளர் அருள்தாஸ், துணை செயலாளர்கள் ராஜேந்திரன், சுமித்ரா, ராஜா, காரைக்கால் அங்கன்வாடி ஊழியர்கள் பொறுப்பாளர்கள் உஷா, வசந்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
22-Aug-2025