உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் சட்டம், ஒழுங்கு சீர்குலைவு முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் மாஜி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்

புதுச்சேரியில் சட்டம், ஒழுங்கு சீர்குலைவு முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் மாஜி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டம், ஒழுங்கு சீர்குலைவுக்கு பொறுப்பேற்று முதல்வர் ரங்கசாமி ராஜினமா செய்ய வேண்டும் என, மாஜி முதல்வர் நாராயணசாமி கூறினார்.புதுச்சேரியில் அவர் கூறியதாவது:மத்திய பட்ஜெட்டில், பயிர்களுக்கான இரட்டிப்பு தொகை அறிவிக்கவில்லை. விவசாய கடன் ரத்து கோரிக்கை ஏற்கப்படவில்லை. புதிய தொழிற்சாலைகளுக்கு சலுகைகள் இல்லை.புதுச்சேரியை புறக்கணித்த பட்ஜெட்டை முதல்வர் பாராட்டியுள்ளார். குறைகூறினால், அவரது பதவி பறிபோகும் என்பதால், பட்ஜெட்டை பாராட்டியுள்ளார்.தமிழக, புதுச்சேரி மீனவர்களை இலங்கை ராணுவம் கைது செய்து, இந்தியாவை மிரட்டுகிறது. இதற்கு முடிவு காண முத்தரப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும். கடந்த மன்மோகன்சிங் ஆட்சியில், 48 மணி நேரத்தில், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை மீட்டுள்ளோம். தற்போதைய அரசால் இந்த பிரச்னையை தீர்க்க முடியவில்லை. இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்களை மத்திய அரசு உடனடியாக மீட்க வேண்டும்.புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இதற்கு, தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும். மதுபான தொழிற்சாலை விவகாரத்தில், யார் சம்பந்தப்பட்டு இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி