காங்., முன்னாள் தலைவர் பிறந்த நாள் விழா
புதுச்சேரி: புதுச்சேரி காங்., முன்னாள் தலைவர் சுப்ரமணியன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளையொட்டி, மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி, தங்கத்தேர் இழுக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து முல்லா வீதியில் உள்ள தர்காவில் சிறப்பு தொழுகையும், ரயில் நிலையம் அருகில் உள்ள துாய இருதய ஆண்டவர் பாசிலிகாவில் சிறப்ப பிரார்த்தனையும் நடந்தது. புதுச்சேரி காங்., பொது செயலாளர் மருதுபாண்டியன் ஏற்பாட்டில் நடந்த விழாவில், காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., காங்., துணைத் தலைவர் தேவதாஸ், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திகேயன், இளைஞர் காங்., தலைவர் அனந்தபாபு, ராகுல் பேரவை தலைவர் சேகர், காங்., பொது செயலாளர் தனுசு, இளையராஜா, திருமுருகன், செயலாளர்கள் சூசை, செந்தில், ஏம்பலம் மோகன்தாஸ், புலவர் கோவிந்தராஜ், பஞ்சகாந்தி, சித்ரா, சகுந்தால், எஸ்.சி., எஸ்.டி., பிரிவு தலைவர் ஜெயபால், ராஜ்குமார், ரகுபதி, சண்முகம், நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.