உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காங்., மாநில தலைவருக்கு முன்னாள் அமைச்சர் சவால்

காங்., மாநில தலைவருக்கு முன்னாள் அமைச்சர் சவால்

புதுச்சேரி: காங்., தலைவர் மீதான எனது குற்றச்சாட்டுகளை நிருப்பிக்க தேவையான ஆதாரங்களுடன் தயாராக உள்ளதாக முன்னாள் அமைச்சர் மல்லாடி சவால் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: ஏனாமிற்கு வருகை தந்த காங்., தலைவர் வைத்திலிங்கம், என் மீது பல்வேறு குற்றச்சாட்டு கூறி வீடியோ வெளியிட்டிருந்தார். அதற்கு நான், என் மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் மறுக்க தயாராக உள்ளதாக பதில் வீடியோ வெளியிட்டேன். இந்நிலையில், காங்., எம்.எல்.ஏ., வைத்தியநாதன், எனது சொத்து விபரங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளதோடு, சி.எஸ்.ஆர்., நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். எனது பெயரிலும், எனது மனைவி பெயரிலும் உள்ள சொத்தக்களின் பத்திரங்களுடன் வந்துள்ளேன். வைத்திலிங்கமும், வைத்தியநாதனும் இருவரும் சேர்ந்தோ அல்லது தனித்தனியே எங்கே அழைத்தாலும் விவாதிக்க தயார். என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் கூறுகிறேன். சி.பி.ஐ., விசாரணைக்கும் நான் தயார். நான் கூறுவது தவறு என்பதை நிருபித்துவிட்டால், எந்த தண்டனைக்கும் நான் தயார். உங்களின் பதிலுக்காக நான் காத்திருக்கின்றேன். பத்திரிகையாளர்ளுடன் பேசி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் எனக் கூறியுள்ளார். காங்., தலைவர் வைத்திலிங்கத்திற்கும், முன்னாள் அமைச்சரும், தற்போதைய புதுச்சேரி அரசின் டில்லி பிரிதிநிதியுமான மல்லாடி கிருஷ்ணாராவிற்கும் இடையே நடைபெற்று வரும் வீடியோ பதிவு மோதல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை