மேலும் செய்திகள்
மாணவர்கள் வாழ்வில் விளையாடலாமா?
21-Sep-2025
புதுச்சேரி: அரசு துறைகள் மீது மத்திய தணிக்கை குழு கூறிய, குற்றச்சாட்டுகள் மீது கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை: புதுச்சேரி அரசு மீது பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் நடப்பதாக, நாங்கள் கூறி வந்தோம். இந்நிலையில், மத்திய தணிக்கை குழுவின் அறிக்கையில், அரசு பல்வேறு நிதி முறைகேடுகள் செய்துள்ளதாக கூறியுள்ளனர். ஆட்சிகள் மாறினாலும், அதே நபர்கள் மீண்டும், கட்சி மாறி புதிய அரசாங்கத்தில் இடம் பெற்று, அதே தவறை, மீண்டும் செய்வதால், ஊழலை ஒழிக்க முடியாது. ஆட்சி மாறியதால் எந்த பலனும் இல்லை. அதே சிந்தனை கொண்ட அரசு எப்படி ஊழல் இல்லாத நிர்வாகத்தை தர முடியும்.அரசு மீது மத்திய தணிக்கை குழு கூறிய குற்றச்சாட்டுகளை, மக்களிடம் அரசு விளக்க வேண்டும். மேலும், தணிக்கை அறிக்கையில், 28 கோடி ரூபாய்க்கு மேல் காணவில்லை எனவும், அது கையாடல் செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. ஆயிரம் ரூபாய் திருடினால், சிறையில் அடைப்பார்கள். பல கோடி ரூபாய், கொள்ளையடித்தவர்களை, அதிகாரத்தின், மூலம், அவர்களை பாதுகாக்கும் போது, மக்கள் விழித்து கொண்டு, அவர்களை அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும். எனவே தணிக்கை குழு கூறிய குற்றச்சாட்டுகள் மீது, கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
21-Sep-2025